\
கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் : கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் : கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம் : கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி
Published on

திருத்தணி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த ராஜா திவ்யா தம்பதியினரின் 10 மாத பெண் குழந்தை பேரரசி. நேற்று இரவு குழந்தை பேரரசியை கட்டிலில் படுக்கவைத்து வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குழந்தை அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்த போது கட்டிலில் படுத்திருந்த குழந்தை கீழே விழுந்தது தெரியவந்தது.

அதில் தலையில் பலத்த காயம் இருந்ததால் உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் 10 மாத பெண் குழந்தை பேரரசி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிலில் படுக்க வைத்திருந்த 10 மாத குழந்தை தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பொதட்டூர்பேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com