தமிழ்நாடு
தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புங்கம்பட்டியில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் 10 மாத குழந்தை விழுந்தது. மதியழகன் என்பவரின் 10 மாத குழந்தை லோகேஷ் தரைமட்ட அளவில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்த விவகாரத்திற்கு பிறகு பெற்றோர்கள் கவனமுடன் செயல்பட்ட வேண்டும் என கூறப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரி அருகே இப்படி ஒரு சோகம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று தண்ணீர் கேனுக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.