10 மணி நேரம் தொடர் பஞ்சஸ் - திருமங்கலம் கராத்தே மாணவர்கள் உலக சாதனை முயற்சி

10 மணி நேரம் தொடர் பஞ்சஸ் - திருமங்கலம் கராத்தே மாணவர்கள் உலக சாதனை முயற்சி

10 மணி நேரம் தொடர் பஞ்சஸ் - திருமங்கலம் கராத்தே மாணவர்கள் உலக சாதனை முயற்சி
Published on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற உலக சாதனைக்கான நிகழ்ச்சியில் 10 மணி நேரம் தொடர் பஞ்சஸ் செய்து, கராத்தே மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 'வேர்ல்டு சோட்டோ கான்' அமைப்பைச் சேர்ந்த 75 மாணவர்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து 10 மணி நேரத்தில் 12.50 லட்சம் கராத்தே பஞ்சஸ் செய்து உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது.

75 மாணவர்களும் மூன்று குழுவாகப் பிரிந்து தொடர்ந்து கராத்தே பஞ்சஸ் செய்யும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். ஐந்து வயது முதல் 25 வயது வரை உள்ள கராத்தே பயின்ற மாணவர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் இந்த சாதனையை அங்கீகரித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com