\
தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்பு
Published on

உசிலம்பட்டியில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த10 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மேற்கு காலணி பகுதியில் தன்னாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் 10அடி நீளமுள்ள பாம்பு தவறி விழுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தன்னாசி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com