காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு

காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு மற்றும் பல்வேறு வகையான காய்ச்சலால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 10 பேர் காய்ச்சலால் உயிரிழந்தனர்.

அதேவேளையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் வீட்டு வசதிவாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில் டெங்கு கொசு புழுக்கள் இருந்ததாக கூறி 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உடையார்பாளையம் அரசுப் பள்ளி சுகாதாராமற்று இருப்பதாகக் கூறி சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com