\
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா - சுகாதாரத்துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா - சுகாதாரத்துறை செயலர் தகவல்

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா - சுகாதாரத்துறை செயலர் தகவல்
Published on: 

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர், ''பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரின் சோதனை மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது'' என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com