ஆம்பூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை - ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஆம்பூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை - ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஆம்பூரில் தேர்தல் பறக்கும்படை வாகன சோதனை - ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
Published on

ஆம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது புறவழிச்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பரந்தாமன் என்பவர் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ராஜனின் இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் 1.50 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டுசென்று சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com