திருச்சி விமான நிலையத்தில் துபாய் மற்றும் கோலாலம்பூரில் இருத்தது கடத்திவரப்பட்ட சுமார் ஒரு கிலோ தங்கம் (1104 கிராம்) பிடிபட்டது.
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்த 517.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 34 லட்சத்து 26 ஆயிரத்து 380 ஆகும்.
இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்த 526.500 கிராம் கடத்தல் தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு 34 லட்சத்து 72 ஆயிரத்து 613 ஆகும்.
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள வான் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2 ஆண் பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.