ஒரேநாளில் திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 1 கிலோ 88 கிராம் தங்கம் - அதிகாரிகள் விசாரணை

ஒரேநாளில் திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 1 கிலோ 88 கிராம் தங்கம் - அதிகாரிகள் விசாரணை
ஒரேநாளில் திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 1 கிலோ 88 கிராம் தங்கம் - அதிகாரிகள் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ₹55,94,493 மதிப்புடைய, ஒரு கிலோ 88 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், அந்த விமானத்தின் ஊழியர் தனது சாக்ஸில் (socks) மறைத்து கடத்திவந்த, ₹34,14,288 மதிப்புடைய, 666 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தை, திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு பயணி தனது பெட்டியில் மறைத்து கடத்திவந்த ₹8,09,864 மதிப்புடைய, 157.5 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தையும், திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், குடிவரவுத்துறை (Immigration) அதிகாரிகள், விமான பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த பையில், ₹8,09,865 மதிப்புடைய,  ஒரு கிலோ 157.5 கிராம் எடையிலான தங்கத்தையும்,  திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இன்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ₹55,94,493 மதிப்புடைய, ஒரு கிலோ 88 கிராம் எடையிலான கடத்தல் தங்கத்தை,  திருச்சி வான் நுண்ணறிவு போலீசார் பறிமுதல் செய்த திருச்சி வான் நுண்ணறிவு போலீசார், தெடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com