2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்

2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்

2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
Published on

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1, 18, 018 பேர் பிடிபட்டுள்ளனர். 

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், போக்குவரத்து விதி மீறல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் டிஜிபி திரிபாதி அனைத்து காவலர்களுக்கும் வாகன சோதனையில் ஈடுபட உத்தரவிட்டார். 

அதன்படி கடந்த 14, 15 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1, 18, 018 பேர் பிடிபட்டனர். நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற 36, 835 பேர் பிடிபட்டனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் 28 பேர் பிடிபட்டனர். குட்கா சட்டம் 542 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com