மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பேரிடர் காலத்துக்கான 1,150 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்கள்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பேரிடர் காலத்துக்கான 1,150 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்கள்
மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது பேரிடர் காலத்துக்கான 1,150 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்கள்

தமிழகம் முழுவதும் 1,150 நடமாடும் மருத்துவ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை, கொரனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்  டி.ஆர் பாலு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அயப்பாக்கம் மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பயன் பெறும் வகையில் 1,150 நடமாடும் மருத்துவ வாகன சேவையை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து துவக்கிவைத்தார். மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இந்த சேவை செயல்படும் எனவும், தேவைப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி அனுப்பி வைக்கப்பட்டு சேவை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது அயப்பாக்கம் ஊராட்சி உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நல திட்டத்தையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,858 மருத்துவ முகாம் நடத்தபட்டு, 965 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அயப்பாக்கம் மருத்துவ ஆரய்ச்சி நிறுவனத்தில் இருந்து 1,150 நடமாடும் மருத்துவ வாகனம் துவங்கபட்டு உள்ளது. 120 கோடி ரூபாய் செலவில் மருந்து மாத்தரைகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது.

மழை காலம் முடியும் வரை காய்ச்சிய குடிநீரை மக்கள் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட அலுவலர்கள் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரின் குளோரின் அளவை கணக்கிட வேண்டும். வீடுகளுக்கு தேடி சென்று மக்களுக்கு மருத்துவம் அளிக்க செயல் தொடர்ந்து நடைபெறும். 6 கோடி பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்கிற இலக்கை தமிழகம் எட்டியுள்ளது.

டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுகாதார துறை எடுத்து வருகிறது. வடசென்னையில் மரை நீர் தேங்கி நிற்க்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மழை காலங்களில் முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ள மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1303 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் இருக்கிறது” என தெரிவித்தார்.

- நவீன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com