மத்திய பட்ஜெட் : தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலைகள்!
உள்கட்டமைப்பு வசதிக்கு 2021 - 2022 ஆம் நிதியாண்டில் ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியில் 3,500 கி.மீ சாலைப்பணிகள் நடைபெறுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாக்குமரி - கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும். 8,500 கி.மீட்டருக்கு புதிய சாலைகளை உருவாக்க மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் 11,500 கி.மீ தூரத்திற்கு சாலைப்பணிகள் அமைக்கும் பணிகள் தொடங்கும். சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.