நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்

நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்

நாய்க்கறியா? ஆட்டுக்கறிக்குத்தான் ஆர்டர் கொடுத்தோம் - கறி விற்பனையாளர்கள்
Published on

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில், சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலில் அழுகிய இறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற உணவு பாதுகாப்புத்துறையினர், பார்சல்கள் வைக்கப்படும் இடத்தில் சோதனை மேற்கொண்டனர். 

அதில் 5க்கும் மேற்பட்ட பெட்டிகளில் ஆயிரத்து 800 கிலோ இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நாய்க்கறியாக இருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள், அவற்றில் சில துண்டுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். நாய்க்கறி வந்ததாக சந்தேகிக்கப்படும் பார்சல், கறி விற்பனை செய்துவரும் அப்துல் ரஷித், முகமதி ரபி உள்ளிட்ட நால்வரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விளக்கமளித்த கறி விற்பனையாளர்கள், தாங்கள் ஆட்டுக்கறியை வாங்கவே ஆர்டர் கொடுத்த நிலையில், அந்த பார்சலில் சந்தேகத்திற்குரிய கறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தங்களிடம் ஆட்டுக்கறிக்கு ஆர்டர் அளித்ததற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறும் கறி உரிமையாளர்கள், இதற்கு பின்னால் யாரோ சதி செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com