”தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்!” - தமிழில் அமித் ஷா ட்வீட்

”தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்!” - தமிழில் அமித் ஷா ட்வீட்
”தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்!” - தமிழில் அமித் ஷா ட்வீட்

”தமிழக மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில்  ட்வீட் செய்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 158 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 77 தொகுதிகளிலும், அக்கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும், பாஜக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது.

மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்” என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com