’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ - ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை

’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ - ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை

’தீயணைப்புத் துறையினருக்கும் சலுகைகள் வழங்குக’ - ஓய்வுபெற்ற டிஜிபி கோரிக்கை
Published on

"காவல்துறையினரை போலவே தீயணைப்புத் துறையினருக்கும் பல சலுகைகளை வழங்க வேண்டும்" என ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை டிஜிபி கரன்சின்ஹா கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் இயக்குநரும், டிஜிபியுமான கரன்சின்ஹா, இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கரன் சின்ஹா பேசியபோது, "தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு ரூ. 8 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காவல்துறையினருக்கு வழங்கப்படும் சலுகைளை போன்றே தீயணைப்பு துறையினருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வேண்டுகோளை தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com