”விவசாய மசோதா மீதான பிரச்னையை அரசியலாக்கி, விவசாயிகள் நலனை தடுக்கிறது அரசு”- ஜி.கே.வாசன்

”விவசாய மசோதா மீதான பிரச்னையை அரசியலாக்கி, விவசாயிகள் நலனை தடுக்கிறது அரசு”- ஜி.கே.வாசன்
”விவசாய மசோதா மீதான பிரச்னையை அரசியலாக்கி, விவசாயிகள் நலனை தடுக்கிறது அரசு”- ஜி.கே.வாசன்

“விவசாயிகளின் வருங்கால நலனுக்கு தடையாக இருக்கிறார்கள் மத்திய அரசின் எதிர்கட்சிகள்" என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள், கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவது என்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஜீ.கே.வாசன் தலைமையில் இன்று வேலூரில் நடைபெற்றது. 

முன்னதாக ஜி.கே வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அகில இந்திய அளவில் விவசாய மசோதாவை கொண்டுவர காரணம், விவசாயிகள் நலம்தான். விவசாய மசோதா மீதான பிரச்னையை அரசியல் பிரச்னையாக்கி, விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய நலனை தடுத்து வருகிறது மத்திய அரசின் எதிர்கட்சிகள். விவசாய சட்டத்தை நிறைவேற்றி மக்களுக்கு நன்மை பயக்குவதே த.மா.க.வின் நோக்கமும்.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் போராட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சட்டத்தில் சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்க வேண்டுமே தவிர, பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி முக்கிய மசோதாக்களை தடுத்தது போல் இதையும் தடுக்க முற்படுகிறது எதிர்கட்சிகள். அரசும் விவசாயிகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தும் இதற்கு தடையாக இருப்பது எதிர்கட்சிகள் தான்.

மத்திய வேளான் சட்டம் குறித்து பேசி தீர்க்க வேண்டுமே தவிர கண்மூடித்தனமான நடவடிக்கை கூடாது. சட்டமன்றத்தில் எதிர்ப்பு தீர்மானம் கொண்டுவருவது சரியல்ல. இது போன்ற செயலால் விவசாயிகளின் வருங்கால நலனுக்கு தடையாக இருக்கிறார்கள்.

திமுக தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற வாக்குறுதியை அள்ளிக்கொடுத்தார்கள். ஆனால் தற்போது அதை நிறைவேற்ற தயங்குகிறார்கள். இது தொடர்பாக எந்தவித தெளிவையும் மக்களுக்கு அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் மக்கள் குழப்பமான மனநிலையில், வாக்களித்து ஏமாந்த நிலையில் உள்ளனர். வேளாண் கடன், கல்விக்கடன், நகை கடன், கேஸ் விலை போன்றவற்றை எதுவும் செய்யவில்லை. இதை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

‘மேகதாதுவில் அணைகட்ட கூடாது’ என்ற கருத்தில் த.மா.க.வும் உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு கேட்டாலும் மத்திய அரசு இதற்கு இசைவு தராது. மேகதாதுவில் அணைகட்டினால் விவசாயிகள் மட்டும் இன்றி குடிதண்ணீருக்கும் மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்படும்” என கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com