\
"தமிழ்நாடு ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" - வன்னியரசு

"தமிழ்நாடு ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" - வன்னியரசு

"தமிழ்நாடு ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" - வன்னியரசு
Published on

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி பாப்புலர் ப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதை தெரிவித்தார். வரும் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என வன்னியரசு கேட்டுக் கொண்டார். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி, தேசிய விடுதலை மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானவர் என வன்னியரசு குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com