சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் -முதலமைச்சர்

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் -முதலமைச்சர்

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் -முதலமைச்சர்
Published on

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த ‌நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் சிவாஜி கணேசன் பெற்ற விருதுகளைப் பட்டியலிட்டார். கலைமாமணி, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளைப் பெற்று, நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட மறைந்த சிவாஜி கணேசன், கலைத்துறைக்கு ஆற்றிய சேவைகளை போற்றிடும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 1ஆம் தேதி, ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். 

அதேபோல் சுகந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட இருப்பதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும்  அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com