“பாசமான எங்கள் மகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது”-விபரீத முடிவு எடுத்த வயது முதிர்ந்த தம்பதி!

“பாசமான எங்கள் மகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது”-விபரீத முடிவு எடுத்த வயது முதிர்ந்த தம்பதி!
“பாசமான எங்கள் மகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது”-விபரீத முடிவு எடுத்த வயது முதிர்ந்த தம்பதி!

தாம்பரத்தில் பிள்ளைக்கு பாரமாக இருக்ககூடாது என எண்ணி வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ராஜா ஐயர் முதல் தெருவில் வசித்து வந்தவர் ஆனந்தன்(72). இவரது மனைவி கங்காதேவி(62). மதுரையை சேர்ந்த இந்த தம்பதிக்கு 32 வயதில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். மகனுக்கும் திருமணமாகி அனைவரும் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை ஆனந்தனுக்கு கண்ணில் குளுக்கோமா என்ற வியாதி வந்து கண்பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. தாய் கங்காதேவிக்கும் முடக்குவாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இருப்பினும் தாய் தந்தையரை கண்ணும் கருத்துமாக மகன் ஜெயக்குமார் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மகனுக்கு பாரமாக இருக்கக்கூடாது என எண்ணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் தொட்டிலில் ஆனந்தன் - கங்காதேவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் தங்களது மகனுக்கு பாரமாகக் கூடாது என்பதற்காக பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சமபவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com