'ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்' - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

'ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்' - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

'ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான்' - துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்
Published on

'ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி' என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தாராபுரம் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

அதில், கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, “காங்கிரஸ் திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மெரினா கடற்கடையில் 15 லட்டம் தமிழர்கள் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்தினார்கள். அப்போது நான் தமிழக முதல்வராக இருந்தேன்.

இப்பிரச்சனையை பிரதமர் மோடியிடம் கொண்டு சென்றேன். உடனே 24 மணி நேரத்தில் நான்கு துறைகளின் அரசாணையைத் தந்து ஜல்லிக்கட்டு தடையை உடைத்தப் பெருமை பிரதமர் மோடியையே சேரும். அதனால், ரியல் ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான்” என்று பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com