\
“நான் காணாமல் போகவில்லை, நன்றாக இருக்கிறேன்” - புஷ்பவனம் குப்புசாமி மகள் தகவல்

“நான் காணாமல் போகவில்லை, நன்றாக இருக்கிறேன்” - புஷ்பவனம் குப்புசாமி மகள் தகவல்

“நான் காணாமல் போகவில்லை, நன்றாக இருக்கிறேன்” - புஷ்பவனம் குப்புசாமி மகள் தகவல்
Published on

தன்னை யாரும் கடத்தவில்லை, தான் காணாமலும் போகவில்லை என நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மகள் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமானவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களது மகள் பல்லவி. டாக்டருக்கு படித்துள்ளார். இவரை காணவில்லை என இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டுள்ளது. “சகோதரிக்கும் அவருக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. அதனால் கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் காணாமல் போன பல்லவியை தேடி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பல்லவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தவறான செய்திகள் பகிரப்படுகின்றன. நான் நன்றாகவே இருக்கிறேன். போலியான தகவல்களை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com