\
”அடையார் என எழுதுவதை இனியாவது அடையாறு என எழுதட்டும்” - தொல். திருமாவளவன்

”அடையார் என எழுதுவதை இனியாவது அடையாறு என எழுதட்டும்” - தொல். திருமாவளவன்

”அடையார் என எழுதுவதை இனியாவது அடையாறு என எழுதட்டும்” - தொல். திருமாவளவன்
Published on

தமிழகம் முழுவதும் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியிடப்பட்டதற்கு தொல் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் “தமிழகம் முழுவதிலும் உள்ள ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது”.இதனை பலரும் வரவேற்றனர்.


இந்நிலையில் இந்த மாற்றத்தை வரவேற்று விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “அரசாணை: இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. அடையார் என எழுதுவதை இனியாவது அடையாறு எனவும் பாலார் என எழுதுவதை பாலாறு எனவும் எழுதட்டும். போர்டோனோவோ என்பதை பரங்கிப்பேட்டை என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com