\
”அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியமானது” - விஜயபாஸ்கர்!

”அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியமானது” - விஜயபாஸ்கர்!

”அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியமானது” - விஜயபாஸ்கர்!
Published on

"அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது”  என்று சுகாதரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். 

மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணி அளவில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் நினைவு இழந்த நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில, இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிர் பிரிந்தது.

இதனிடையே, நேற்று முன்தினம் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் அவர் உயிரிழந்தார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் “அரசின் மீதும் தடுப்பூசி மீதும் நம்பிக்கை அவசியமானது. விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதை வேறு விதமாக இணைக்கக்கூடாது” என்று பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com