\
“தலைவர் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்” - விஜயகாந்த் மகன்

“தலைவர் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்” - விஜயகாந்த் மகன்

“தலைவர் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்” - விஜயகாந்த் மகன்
Published on

தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் புனித நற்செய்தி அருளப்பர் தேவாலயத்தில், தேமுதிக சார்பில் கிருஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருணாலயா இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பலகாரம் மற்றும் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியில. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தேமுதிகவை பொறுத்தவரை கட்சியில் எந்தக் குளறுபடியும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதில் எந்தக் கட்டுபாடும் இல்லை. தேமுதிக தலைவரும், தலைமையும் முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com