”சொந்த பணிகள் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினேன்”-கமீலா நாசர் விளக்கம்

”சொந்த பணிகள் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினேன்”-கமீலா நாசர் விளக்கம்
”சொந்த பணிகள் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினேன்”-கமீலா நாசர் விளக்கம்

சொந்த பணிகள் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியதாக கமீலா நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் நாசரின் மனைவியான கமீலா நாசர் , தொடக்கம் முதலே மக்கள் நீதி மய்யத்தில் பணியாற்றி வந்தவர். சென்னை மண்டல மாநிலச் செயலாளராக இருக்கும் அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 92000 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயில் ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாகவும் ஆனால், வாய்ப்பு தரப்படாததால் அதிருப்தியில் இருந்த கமீலா நாசர் சில வாரங்களுக்கு முன்பே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருடைய விலகல் கடிதத்தை ஏற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசர் விடுவிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால்தான் கட்சியிலிருந்து விலகினார் என்று தகவல் பரவியதை அடுத்து தற்போது கமிலா நாசர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ”என் சொந்த பணிகள் காரணம் கருதி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். இந்த நேரத்தில் அரசியல் அட்சரம் கற்று தந்த ஆசான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மற்றும் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்னோடு பயணித்த கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தை என் வாழ்நாள் பொக்கிஷமாக கருதி விடை பெறுகிறேன்.
நன்றிகள்” குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com