“எந்த ஆவணத்தை கொண்டு குடியுரிமையை நிரூபிப்பது?” - அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல்

“எந்த ஆவணத்தை கொண்டு குடியுரிமையை நிரூபிப்பது?” - அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல்

“எந்த ஆவணத்தை கொண்டு குடியுரிமையை நிரூபிப்பது?” - அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அதிமுக அமைச்சர் நிலோபெர் கஃபீல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முஸ்லீம் சமுதாய மக்களிடையே அவர் உரையாடினார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து நிலோபெர் பேசியது இடம்பெற்றுள்ளது.

அந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து சில ஐயங்களை எழுப்பினர். சிஏஏ-வால் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை எனவும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் விளக்கினார்.

அப்போது, ‘ஏழைகளிடம் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் எதுவும் இருக்காது. அதனால், அரசு ஆவணங்கள் கேட்டால், அவர்கள் எப்படி தருவார்கள்’ என ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிலோபெர் கஃபீல், குடியுரிமைக்காக ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கொடுக்கலாம் என்று கூறினார்.

ஆனால், அந்த பதிலால் சமாதானம் அடையாத கேள்வி எழுப்பிய நபர், ‘குடியுரிமைக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்றவை ஏற்றுக் கொள்ளப்படாது என கூறப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

இருப்பினும், இதுதொடர்பாக நியூஸ் மினிட்க்கு அவர் அளித்த பேட்டியில், “நான் அச்சத்தில் உள்ளேன். நானும் முஸ்லீம்தான். அதே சமுதாயத்தில் இருந்துதான் நானும் வந்திருக்கிறேன். எந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் அச்சத்தில் உள்ளார்கள்” என்றார்.

நாடு முழுவதும் நடைபெற்று வரும் சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் குறித்து பேசிய நிலோபெர் கஃபீல், “நான் தமிழ்நாட்டை பற்றி மட்டும்தான் பேச முடியும். ஏனெனில் இங்கு நடப்பதைதான் நான் நேரில் பார்க்கிறேன். வேலூரை பொறுத்தவரை போராட்டங்களை ஜமாத் வழிநடத்தினார். போராட்டம் அமைதியான வழியிலே நடைபெற்று வருகின்றன. அதிமுக, திமுக அல்லது பாமக என எந்தக் கட்சியாக இருந்தாலும் நாங்கள் எங்களது உரிமைகளையே கேட்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com