’திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் ’ - மு.க.ஸ்டாலின்

’திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் ’ - மு.க.ஸ்டாலின்
’திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் ’ - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில், இன்று திமுக சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபை கூட்டத்தில், அக்கட்சியின் சார்பில் பங்கேற்று பேசிய மு.க. ஸ்டாலின்,

   “கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் இதைத்தான் அதிமுக கொள்கை அமைத்து ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை உங்கள் முன்னால் வைத்திருக்கிறோம். விவசாயிகளை வஞ்சித்திருக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. கஜானாவை  காலி செய்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தான் இந்த ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்க வைத்துள்ளது. தமிழர்களின் பெருமையை சீரழிக்கிறது. இதனால், அதிமுகவை நிராகரிக்கவேண்டும்” என்றார்.  மேலும், “திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்'’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com