"வாக்களிக்கும்போது சாதி, மதம் பார்க்காதீர்கள்!" - கோவையில் வாக்களித்த ஜகி வாசுதேவ்

"வாக்களிக்கும்போது சாதி, மதம் பார்க்காதீர்கள்!" - கோவையில் வாக்களித்த ஜகி வாசுதேவ்

"வாக்களிக்கும்போது சாதி, மதம் பார்க்காதீர்கள்!" - கோவையில் வாக்களித்த ஜகி வாசுதேவ்
Published on

நாம் வாக்களிக்கும் போது நம் சாதி, மதம், கட்சி எது என்று பார்க்க வேண்டாம்; யார் மக்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறதோ, அவருக்கு ஓட்டு போட வேண்டும்" என்றார் ஜகி வாசுதேவ்.

கோவை - முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ், "தேர்தல் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; நம் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தன்மை. வாக்குரிமை என்பது ஒரு தனி மனிதனுக்கு தரப்பட்டுள்ள மகத்தான மரியாதை ஆகும்.

நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும்தான் உள்ளது; அதனால் இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதை அனைவரும் பொறுப்பாக கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நாம் வாக்களிக்கும் போது நம் சாதி, மதம், கட்சி எது என்று பார்க்க வேண்டாம்; யார் நம் மாநிலத்திற்கு முன்னேற்றம் கொண்டு வருவார்கள், வெற்றிகரமாக தமிழ்நாட்டினை நடத்திச் செல்வார்கள்; மக்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ, நீங்கள் அவருக்கு ஓட்டு போட வேண்டும்" என்றார்.

மேலும், "கோவில் அடிமை நிறுத்து என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக நடந்து வருகிறது. ஏறத்தாழ 3.5 கோடி மக்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள். இப்பொழுது இந்த இயக்கத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரளவிற்கு இது குறித்து பேசி இருக்கிறார்கள். முக்கியமான இரண்டு கட்சிகள் சில படிகள் எடுத்து இருகிறார்கள். கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு தேவையான பணம் கொடுக்கிறோம், தேவையானதை செய்கிறோம் என்று சொல்லி இருகிறார்கள். இது எல்லாம் சரி, ஆனால் அரசு செய்தால் என்ன செய்ய முடியும்? கட்டிடங்கள் மட்டும் தான் சரி செய்ய முடியும். மேலும் இது அரசு ஊழியர்களை வைத்து செய்கின்ற வேலை அல்ல.

கோவில்கள் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் அதற்காக நெஞ்சில் இருந்து பக்தியுணர்வு பொங்கி வரும் பக்தர்கள் கரங்களில் தான் இருக்க வேண்டும். அடுத்து எந்த கட்சி அரசாங்கத்திற்கு வந்தாலும், நாம் அவர்களுடன் வேலை செய்து அடுத்த ஐந்து வருடத்தில் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நோக்கத்தில் இருக்கின்றோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com