”தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்”- மக்களுக்கு whatsapp மூலம் திருச்சி ஆட்சியர் அறிவுரை

”தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்”- மக்களுக்கு whatsapp மூலம் திருச்சி ஆட்சியர் அறிவுரை
”தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்”- மக்களுக்கு whatsapp மூலம் திருச்சி ஆட்சியர் அறிவுரை

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களுக்கான எச்சரிக்கையை குறித்து பேசி வாட்ஸ் அப் மூலம் அனுப்பி அறிவுரையாக வழங்கியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். தொடர் மழை காரணமாக காரணமாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் மின் கம்பிகள் அறுந்து விழும் நிலை ஏற்படும். இதேபோல் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மழையின் காரணமாக ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளேன், பாதுகாப்பாக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு சென்று மாணவர்கள், பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சாலையில் பொதுமக்கள் கவனத்துடன் நடக்க வேண்டும். நீர் நிலைகள் முழுவதும் நிரம்பி இருந்தால் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம். நீர்நிலைகளில் யாரும் இறங்க வேண்டாம், எந்த விபத்தும் இல்லாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பொதுமக்களுக்கு அறிவுரை உடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com