தமிழ்நாடு
"அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்": சென்னை மாநகராட்சி
"அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்": சென்னை மாநகராட்சி
அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருக்கிறது.
அரும்பாக்கத்தில் எஞ்சிய மக்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்து மறுகுடியமர்வு செய்யப்படும் என்றும், அரும்பாக்கத்தில் ஏற்கனவே 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்படும் எனவும், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயகரமான இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.