"நேர்த்தியாக நடிப்பவர்; மிகவும் ஒழுக்கமானவர்"..தனுஷ் குறித்து தி கிரே மேன் நடிகர் புகழாரம்

"நேர்த்தியாக நடிப்பவர்; மிகவும் ஒழுக்கமானவர்"..தனுஷ் குறித்து தி கிரே மேன் நடிகர் புகழாரம்
"நேர்த்தியாக நடிப்பவர்; மிகவும் ஒழுக்கமானவர்"..தனுஷ் குறித்து தி கிரே மேன் நடிகர் புகழாரம்

நடிகர் தனுஷ் நடிப்பில், தற்போது உருவாகியுள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ (The Grey Man) படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றது. ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ படத்தை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் தான் ‘தி கிரே மேன்’.

இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படம் குறிப்பிட்ட சில திரையரங்குகளில், ஜூலை 15-ம் தேதியும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாகவும் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் ஜேக்கப் தி ஹன்டர் எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

“தனுஷ் மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியதை நான் மிகவும் ரசித்தேன். அவரை முழுமையாக புரிந்து கொள்ள எனக்கு நேரம் போதவில்லை. எனவே அவருடன் இன்னொரு படத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கு என்னால் வெகு நாட்கள் காத்திருக்க இயலாது. அவர் மிகவும் ஒழுக்கம் மிக்கவர். நடிப்பில் எந்த தவறும் செய்யமாட்டார். அவ்வளவு நேர்த்தியாக நடிப்பார். அசாத்திய நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவர். அவருடன் இருக்கும் தருணங்கள் அருமையானது. நான் அவருடன் வேலை செய்வதை மிகவும் ரசித்தேன். ” என்று அவருடன் பணியாற்றிய ரியான் கோஸ்லிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

படத்தில் நடத்துள்ள மற்றொரு நடிகர் ஜீன்-பேஜ் “தனுஷின் ஸ்டைல், கெட்டப் மற்றும் க்ரேஸ் படத்தில் அனைவரும் ரசிக்க வேண்டிய ஒன்று. படத்தில் ஒரு இடியைப் போன்ற அபாரமான ஆற்றலை அவர் நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார். பேட்மேன் இரு மடங்கு கெட்டவராக இருந்தால், தனுஷின் நடிப்பு வெளிப்படும்போது அது சரிபாதியாக குறைந்து விடும் அளவுக்கு தனுஷ் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com