”விடுதலைக்கு பிறகு கூட சூரியனை பார்க்க முடியவில்லை”-முதல்வருக்கு ராபர்ட் பயஸ் வேதனை கடிதம்

”விடுதலைக்கு பிறகு கூட சூரியனை பார்க்க முடியவில்லை”-முதல்வருக்கு ராபர்ட் பயஸ் வேதனை கடிதம்
”விடுதலைக்கு பிறகு கூட சூரியனை பார்க்க முடியவில்லை”-முதல்வருக்கு ராபர்ட் பயஸ் வேதனை கடிதம்

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராபர்ட் பயஸ், உச்சநீதீமன்றம் விடுதலை தீர்ப்பு வழங்கிய பின்பும் தன்னால் சூரியனை பார்க்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், ராபர்ட் பயஸ் 3வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், பின்னர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். 'உச்சநீதீமன்றம் விடுதலை கொடுத்த பின்பும் கூட தன்னால், சூரியனை பார்க்க முடியவில்லை' என தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராபர்ட் பயஸ் தனது வேதனையை குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்தநிலையில், கடந்த 11.11. 2022 அன்று, உச்சிநீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட *ராபர்ட் பயஸ், திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த வழக்கில் விடுதலையானவர்களில் நான்கு பேர் மட்டுமே திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஒரு அறையிலும், முருகன், சாந்தன் ஆகியோர் மற்றொரு அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ், உச்சநீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் தங்களை விடுவிக்க வேண்டும், அல்லது அயல்நாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வருக்கு கடிதம் அனுப்பிள்ளார். மூன்றாவது முறயாக தற்போது கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அந்த கடிதத்தில் 'ஆஸ்துமா, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள என்னை, சிறப்பு முகாமுக்குள்ளே நடைபயிற்சிக்கு கூட அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. பாதுகாப்பு என காரணம் சொல்லி எங்களை ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர். எங்களால் சூரியனைக் கூட பார்க்க முடியாவில்லை என ராபர்ட் பயஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை ராபர்ட் பயஸ் கைவிட வேண்டுமென வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என ராபர்ட் பயஸ் உறுதியாக கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com