\
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உருக்கமான ஆடியோ.!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உருக்கமான ஆடியோ.!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உருக்கமான ஆடியோ.!
Published on: 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தழுதழுத்த குரலில் உருக்கமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்துள்ளார்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தழுதழுத்த குரலில்  உருக்கமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்.. 
 
''எல்லாருமே என்கிட்ட ரொம்ப எக்ஸ்பேர்ட் பண்ணீங்க. எனக்குத்தான் பயமா இருக்கு.. ப்ளீஸ் என்னை ப்ளேம் பண்ணாதீங்க. இது நான் எடுத்த முடிவுதான்.. எனக்கு ரொம்ப ஹேப்பியான ஃபேம்லி கிடைச்சிருக்கு.. எனக்குத்தான் அத பாதுகாக்க தெரியல. Bye. 'Amma I'm going to miss you. Mom sorry'''..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com