“மயானமே என்னுடைய வீடு”- ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சீதா..!
“மயானமே என்னுடைய வீடு”- ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சீதா..!
சேலத்தை சேர்ந்த சீதா, ஆதரவற்றவர்களின் உடல்களை 20 ஆண்டுகளாக அடக்கம் செய்து வருகிறார்.
சேலத்தை சேர்ந்தவர் சீதா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை செய்து வருகிறார். உடல்களை அடக்கம் செய்வதையே பிரதான பணியாக செய்யும் சீதா, மயானாமே தன்னுடைய வீடு என்றும் கூறுகிறார்.
இது குறித்து சீதா கூறும்போது “ ஆதரவற்றவர் என்று கூறி யாரும் அடக்கம் செய்யப்படாமல் இருக்கக்கூடாது என்பதே எனது குறிக்கோள். ஆதரவற்றவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது மனம் திருப்தியடைகிறது. எனது ஆயுள் வரை மயானத்திலேயே பணிபுரிவதே விரும்புகிறேன்.
குழந்தைகளின் உடல்களை அடக்கம் செய்யும்போது மிக கஷ்டமாக இருக்கும். இது ரை எனது திருமணத்தை பற்றி நான் சிந்திக்கவில்லை. மயானத்தில் கால நேரம் பார்க்காமல் பணிபுரியும் எங்களை போன்றவர்களுக்கு அரசு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.