‘உங்களால் தோற்றோம்’: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்

‘உங்களால் தோற்றோம்’: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்
‘உங்களால் தோற்றோம்’: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்

'உங்களால்தான்' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, பாஜகவின் கே.டி.ராகவன் பதிலளித்திருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக தோல்வியடைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்த நிலையில், அதிமுகவால்தான் பாஜக தோற்றதாக பொருள்படும் வகையில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததால்தான் அதிமுகவுக்கு தோல்வி என்று கூறியிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பின் பேரவைக்குள் நுழைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com