\
பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி

பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு - பக்தர்கள் மகிழ்ச்சி
Published on: 

பழனி முருகன் கோயிலில் வழங்கப்பட்டு வரும் பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் மிகவும் பிரபலம். இந்தப் பஞ்சாமிர்தத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அத்துடன் கோயிலிக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை உண்டால் சில நோய்கள் தீரும் என்றும் கருதுகின்றனர். இந்தப் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதன்முறையாக தமிழ்நாட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமை பழனி கோயிலுக்கு கிடைத்துள்ளது. வாழைப்பழம், வெல்லம், நெய், தேன்,ஏளக்காய், பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com