\
பெண்ணை தரக்குறைவாக பேசியதாக மிசா பாண்டியன் கைது

பெண்ணை தரக்குறைவாக பேசியதாக மிசா பாண்டியன் கைது

பெண்ணை தரக்குறைவாக பேசியதாக மிசா பாண்டியன் கைது
Published on

திமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை பாண்டிகோயில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் யாழினி (27). கடந்த 2-ம் தேதி, இந்தக் கோயிலில், முன்னாள் துணை மேயரும், திமுக மதுரை நகர் தெற்கு மாவட்ட அவைத்தலைவருமான மிசா பாண்டியன் சாமி கும்பிட வந்தார். அப்போது அவருக்கும் யாழினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாழினியை மிசா பாண்டியன் தரக்குறைவாகவும் தகாத வார்த்தைகளாலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து யாழினி, மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.  அதன் அடிப்படையில் மிசா பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com