ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்குவதற்கு 7 நாட்கள் ஆகும்: மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்குவதற்கு 7 நாட்கள் ஆகும்: மாவட்ட ஆட்சியர்
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்குவதற்கு 7 நாட்கள் ஆகும்: மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவத்திற்கான ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்குவதற்கு 7 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

 ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூன் மாதம் இறுதி வரை இந்த ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ”இந்த ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யப்படவேண்டும். காப்பர் தயாரிப்புக்கான எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது” என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை கண்காணிப்பதற்காக உள்ளூர் மக்கள் ஒப்புதலுடன்  குழு ஒன்றை அமைத்துள்ளது.

இக்குழுவானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வேதியியல் துறை தலைவர் உதவி பேராசிரியர் கனகவேல், தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் ஜிர்கோனியம் ஆலையின் தீ மற்றும் பாதுகாப்பு துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி அமர்நாத், தூத்துக்குடி அனல் மின் நிலைய அதிகாரி பெல்லார்மின் அன்டன், மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் சத்தியராஜ் உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக ஆலைக்குள் சென்றுள்ளனர். இவர்கள் ஆலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரையை தொடர்ந்து ஆலைக்கு மின் இணைப்பு வழங்கபட்டு ஆக்சிஜன் உற்பத்திக்கான நடவடிக்கை தொடங்கும் என தெரிகிறது. சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து ஆய்வு முடிவுக்கு பின்னர் ஆக்சிஜன் தயாரிப்பு கண்காணிப்பு குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com