\
"தமிழகத்தில் 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது" : கமல்ஹாசன்

"தமிழகத்தில் 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது" : கமல்ஹாசன்

"தமிழகத்தில் 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது" : கமல்ஹாசன்
Published on

தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில்,

“தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% உயர்ந்துள்ளது. தேர்தல் ஆரவாரங்களில் அமுங்கி விடக்கூடாத அபாய எச்சரிக்கை இது.

இந்த வேகத்தில் நோய் பரவுவது பேராபத்து. சகல முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு ஒவ்வொரு தமிழரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று எச்சரிகை செய்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com