அசுத்த ரத்தத்தால் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

அசுத்த ரத்தத்தால் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு

அசுத்த ரத்தத்தால் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு
Published on

அசுத்த ரத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் 3 அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், பாதுகாக்கப்பட்ட அறையில் நிலவிய வெப்பநிலை மாற்றத்தால் ரத்தம் மாசுபாடு அடைந்துள்ளது என்றும் அதனை சோதனை செய்த மருத்துவர்கள் பாதுகாப்பான ரத்தம் என்று சான்றிதழ் அளித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 

தர்மபுரி, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் போதுதான், சில கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புக்கு அசுத்தமான ரத்தமே காரணம் என்று கண்டறியப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் சில பெண் நோயாளிகளுக்கு இந்த ரத்தத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அதிகாரிகள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் ருக்மணி ஆகியோருக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘தவறிழைத்தவர்கள் மீது குற்றப்புகார் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

‘ரத்த வங்கி ஆய்வாளர்கள் தங்கள் சோதனையின் போது, சாதாரணமான நபர்கள் கூட கண்டுபிடிக்கக் கூடிய அசுத்தமான ரத்தத்திற்கு, எப்படி பாதுகாப்பானது என்று உறுதியளித்தார்கள்’ என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

courtesy - times of india

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com