எழில்மிகு தமிழகம் படைக்க உழைத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர்களையும், நம்பிக்கை நட்சத்திரங்களையும் அங்கீகரிக்கும் நமது புதிய தலைமுறையின் ஏற்றமிகு மேடை.

தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஆகஸ்ட் 24, 2023 வியாழன்

புதிய தலைமுறை

தமிழன் விருதுகள் 2023

தங்கள் அசாதாரண சாதனைகளின் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய தமிழர்களை, தமிழன் விருதுகள் மூலம் புதிய தலைமுறை தொலைக்காட்சி கொண்டாடி வருகிறது. கலை, இலக்கியம், வணிகம், அறிவியல் & தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளைச் சேர்ந்த இந்த சிறந்த ஆளுமைகள் வருங்கால தலைமுறையினர் சாதனைகள் புரிய ஊக்கமளிக்கின்றனர்

இந்த ஆளுமைகளின் இடைவிடா முயற்சியை அங்கீகரிக்கும் மாபெரும் தளமாக தமிழன் விருதுகள் மேடை அமைகிறது. இவர்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் தமிழ்ச் சமூகத்தினுள் பெருமையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழன் விருதுகள் வெறும் கொண்டாட்டத்துக்கான தளம் மட்டும் அல்ல, வருங்கால தமிழ் சமூகத்தை பெரிய கனவு காணவும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் மேன்மை அடையவும், இந்த சமுதாயத்துக்கு நேர்மறையான பங்களிக்கவும் ஊக்குவிக்கிறது.

பல்வேறு பின்னணிகள், தொழில்கள் மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் மேடையாகவும் தமிழன் விருதுகள் அமைகிறது.

ஆளுமைகளை கொண்டாடுவதன் மூலமும், இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதன் மூலமும், தோழமை மற்றும் தன்னம்பிக்கையை தமிழன் விருதுகள் வளர்க்கிறது. தமிழ் சமூகத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் தமிழன் விருதுகள், நம் முன் உள்ள அளவற்ற சாத்தியக்கூறுகளுக்கும் சான்றாக உள்ளது.

புதுமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு செழித்து வளரக்கூடிய பிரகாசமான எதிர்காலத்தைத் தமிழர்கள் இணைந்து தழுவுவோம். திறமைகளை கொண்டாடும், சாதனை படைக்க துடிக்கும் இளம் தலைமுறையினரை ஊக்கமளிக்கும் இந்த மாபெரும் விழாவில் எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.

Days

Hours

Mins

Sec