\
“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை

“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை

“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை
Published on: 

நடிகர் ரன்வீர் தனது கூலிங் கிளாஸை ஏன் போட்டிருக்கார் ? என்று தனது மகள் தன்னிடம் வினவியதாக கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தனது மகள் ஜிவா ஆகியோரின் புகைப்படத்தை ஒரே புகைப்பட இணைத்து அதனை இன்ஸ்டாகிராமில் தோனி வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் ரன்வீர் மற்றும் ஜிவா ஆகிய இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான கூலிங் கிளாஸை அணிந்துள்ளனர். அந்தப் பதிவுடன் ஒரு நகைச்சுவையான விஷயத்தை தோனி பகிர்ந்துள்ளார்.

அதில், “ரன்வீர் ஏன் எனது கூலிங் கிளாய் போட்டியிருக்கிறார் ? என்று ஜிவா என்னிடம் கேட்டாள். பின்னர் மாடிக்குச் சென்று அவளது கூலிங் கிளாஸை தேடி எடுத்துவிட்டாள். ஒருவழியாக எனது கிளாஸ் என்னிடம் தான் இருக்கிறது என்று கூறினாள். இந்த காலத்து குழந்தைகள் வித்தியாசமானவர்கள். நான்கரை வயதில் இதுபோன்று கூலிங் கிளாஸ்யெல்லாம் நான் அணிந்ததே இல்லை. கண்டிப்பாக அவள் அடுத்தமுறை ரன்வீரை பார்க்கும் போது, இதேபோன்ற கூலிங் கிளாஸ் என்னிடம் உள்ளது எனக் கூறுவாள் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com