கணவர் இறந்து ஒரு மாதத்துக்குள் மனைவியும் மரணம்... அதிர்ச்சியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி!

கணவர் இறந்து ஒரு மாதத்துக்குள் மனைவியும் மரணம்... அதிர்ச்சியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி!
கணவர் இறந்து ஒரு மாதத்துக்குள் மனைவியும் மரணம்... அதிர்ச்சியில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி!

ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் கோச் சினிகிவே எம்போபு என்பவர், திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் அவரது கணவர் மரணித்திருந்த நிலையில், தற்போது இவரும் உயிரிழந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்வாப்வே  மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த பயிற்சியாளர் சினிகிவே எம்போபு (37) என்பவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இரண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு பயிற்சியளித்த இவர், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என சொல்லப்படுகிறது. திடீரென அவர் நிலை தடுமாறியதாகவும், பின் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 15 அன்று தான் சினிகிவேவின் கணவரும் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அடுத்தடுத்த இந்த இறப்புகள், இவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவு குறித்து ஜிம்பாவே விளையாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, “ஜிம்பாப்வே மூத்த மகளிர் தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளர் சினிகிவே, அவருடைய கணவர் ஷெப்பர்ட் மகுனுரா மறைந்த ஒரு மாதத்திற்குள் திடீரென மரணமடைந்துள்ளார் என்பதை ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் (ZC) மிகுந்த சோகத்துடனும் அதிர்ச்சியுடனும் இதை அறிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சினிகிவே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர் மரணத்துக்கான காரணம் சொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com