கிளீன் போல்ட்: நடிகையுடன் ஜாகிர்கான் நிச்சயதார்த்தம்
கிரிக்கெட் வீரர் ஜாகிர்கான் - இந்தி நடிகை சகாரிகா காட்கே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஜாகிர்கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். இவர் இந்தி நடிகை சகாரிகா காட்கேவை காதலித்து வந்தார். இவர்களின் பல
வருட காதல் பற்றி கிசு கிசு வந்துகொண்டிருந்தாலும் திருமணம் செய்துகொள்வது பற்றி வாயே திறக்காமல் இருந்தனர். இந்நிலையில்
தனக்கும் சகாரிகாவுக்குமான திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஜாகிர்கான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதோடு சகாரிகாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் மனைவியின் தேர்வுகளில்
சிரித்து விடாதீர்கள். அதில் நீங்களும் ஒருவர்’ என்று கூறியுள்ளார். தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிவரும்
ஜாகிர்கானுக்கு சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

