\
ஒருநாள் போட்டியில் சொதப்பினாலும் டி20யில் அசத்திய சாஹல்..!

ஒருநாள் போட்டியில் சொதப்பினாலும் டி20யில் அசத்திய சாஹல்..!

ஒருநாள் போட்டியில் சொதப்பினாலும் டி20யில் அசத்திய சாஹல்..!
Published on

இந்திய அணி முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியுள்ளது. கே.எல். ராகுல், ஜடேஜா, நடராஜன் மற்றும் சாஹல் என நான்கு பேரின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி இந்த வெற்றியை ருசித்துள்ளது.

அண்மையில் முடிந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 160 ரன்களை இருபது ஓவர்களில் வாரி கொடுத்திருந்த சுழற் பந்து வீச்சாளர் சாஹல் இந்த ஆட்டத்தில் விளையாடினார். அவரது வருகை ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியிருந்த நிலையில் அதற்கு தனது ஆட்டத்தின் மூலம் பதில் கொடுத்துள்ளார் சாஹல். 

இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் சாஹல். இதில் 7 டாட் பால்களும் அடங்கும். ஃபின்ச், ஸ்மித் மற்றும் மேத்யூ வேடை அவுட் செய்திருந்தார் சாஹல். 

ஜடேஜாவுக்கு மாற்றாக இந்த ஆட்டத்தில் மாற்று வீரராக (Concussion Substitute) சாஹல் களம் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com