\
பெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் !

பெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் !

பெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் !
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இன்று தனஸ்ரீ வர்மா என்ற பெண்ணுடன் குடும்பத்தினர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இந்தியாவிற்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் முக்கியமான பவுலர். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சாலஞ்ஜர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். சாஹல் இந்த பொது முடக்க காலத்தில் இன்ஸ்டாகிராமில் சக வீரர்களுடன் உரையாடுவது, துரு துரு என வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் 30 வயதான சாஹல் தற்போது நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுடன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார், அந்த ட்வீட்டில் இருவரும் சேர்ந்து இருக்கும்படி "நாங்கள் ஆம் என்று சொன்னோம் எங்கள் குடும்பங்களுடன்" என பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com