“சிஎஸ்கே சீனியர் படையில் யுவராஜ் இருக்கணும்” - ரசிகர்கள் அன்பு கட்டளை

“சிஎஸ்கே சீனியர் படையில் யுவராஜ் இருக்கணும்” - ரசிகர்கள் அன்பு கட்டளை

“சிஎஸ்கே சீனியர் படையில் யுவராஜ் இருக்கணும்” - ரசிகர்கள் அன்பு கட்டளை
Published on

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்ஸ் அணி கடந்த ஆண்டு விளையாடியது. தோனி தலைமையிலான அந்த அணியில் ஹர்பஜன் சிங், வாட்சன், பிராவே, கேதர் ஜாதவ், ரெய்னா, ராயுடு, இம்ராம் தாஹிர் உள்ளிட்ட ஏராளமான 30 வயதினை கடந்த சீனியர் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அதனால், அணி அறிவிக்கப்பட்ட போது, சில விமர்சனங்கள் எழுந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது சீனியர் சூப்பர் கிங்ஸ் அணியா? என கிண்டல் செய்து மீம்ஸ்கள் பறந்தன.

ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி, சரவெடியாக வெடித்து சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றியது. தோனி தன்னுடைய அதிரடியால் மிரட்டினார். வாட்சன், ராயுடு உள்ளிட்ட வீரர்களும் அசத்தினர். 

இந்நிலையில், 2019 ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் சீனியர் வீரர்கள் சென்னை அணிக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் தங்களது விரும்பத்தை தெரிவித்துள்ளார்கள். அதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெற வேண்டுமென சிஎஸ்கே ரசிகர்கள் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர். 

ஏலத்திற்கு முன்பாக எடுக்கப்படும் வீரர்களில் யுவராஜ் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் எடுக்கவில்லை. அதனால், அந்த அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா என்பது சந்தேகம் தான். அதனால், யுவராஜ் சிங்கை சிஎஸ்கே உரிமையாளர் எடுக்க வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் யுவராஜ் சிறப்பாக விளையாடுவார் என்றும் ராயுடுவை போல் இந்திய அணிக்கு திரும்பவும் செய்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2018 ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை ரூ2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் எடுத்திருந்தது. அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த ஐபிஎல் போட்டியில் அவர் சரியாக ஜொலிக்கவில்லை. 36 வயதான யுவராஜ் கடந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டியில் விளையாடி வெறும் 65 ரன் மட்டுமே எடுத்தார். அதிகபட்சமாக ஸ்கோரே 20 ரன் தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com