‘இந்திய கிரிக்கெட்டில் எனது எதிர்காலம் குறித்து எனக்கு தெளிவு கொடுத்தவர் தோனி’ யுவராஜ்

‘இந்திய கிரிக்கெட்டில் எனது எதிர்காலம் குறித்து எனக்கு தெளிவு கொடுத்தவர் தோனி’ யுவராஜ்

‘இந்திய கிரிக்கெட்டில் எனது எதிர்காலம் குறித்து எனக்கு தெளிவு கொடுத்தவர் தோனி’ யுவராஜ்
Published on

இந்திய கிரிக்கெட்டின் மிக சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இந்தியாவுக்காக 2003, 2007 மற்றும் 2011 உலக கோப்பை தொடரில் விளையாடியவர். 

இந்திய கிரிக்கெட்டில் எனது எதிர்காலம் குறித்து எனக்கு தெளிவு கொடுத்தவர் தோனி என தெரிவித்துள்ளார் அவர்.

“நான் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து மீண்டும் அணிக்குள் திரும்பி வந்தபோது விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார். அவர் அதை செய்யாமல்  போயிருந்தால் என்னால் மீண்டும் விளையாடி இருக்க முடியாது. ஆனால் 2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு குழுவினர் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என எனக்கு சொன்னதே தோனி தான்.

2011 உலகக் கோப்பை வரை தோனிக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்தது. நான் தான் அவரது அணியில் பிரதான வீரர் என என்னிடம் சொல்வார்.

ஆனால் நான் நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. 2015 உலகக் கோப்பை அணியில் என்னை பரிசீலிக்காதது ஏமாற்றம் தான்” என தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com