கங்குலியின் ஓய்வு கொடுத்த வாய்ப்பை புற்றுநோய் பறித்துவிட்டது: யுவராஜ்-ன் தீராத ஆசை

கங்குலியின் ஓய்வு கொடுத்த வாய்ப்பை புற்றுநோய் பறித்துவிட்டது: யுவராஜ்-ன் தீராத ஆசை

கங்குலியின் ஓய்வு கொடுத்த வாய்ப்பை புற்றுநோய் பறித்துவிட்டது: யுவராஜ்-ன் தீராத ஆசை
Published on

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டரும், மேட்ச் வின்னருமான முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ‘இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடாமல் போனது வருத்தம் தான்’ என தெரிவித்துள்ளார். 

கடந்த 2000 துவங்கி 2011 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக விளையாடியவர் யுவராஜ் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

‘இந்தியாவுக்காக நான் அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே விரும்பினேன். இருந்தாலும் அந்நாளில் அணியில் எனக்கான இடம் கிடைப்பதென்பது பெருத்த சவாலாகவே இருந்தது. சச்சின், டிராவிட், சேவாக், வி.வி.எஸ். லக்ஷ்மண், கங்குலி மாதிரியான ஜாம்பவான் வீரர்கள் இடம்பெற்றுள்ள அணியில் எனக்கான இடம் என்பது கடினம். 

அப்போது எனக்கு ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் கங்குலியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியில் விளையாட எனக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைத்தும் புற்றுநோயினால் திசை மாறிவிட்டது.

இருந்தாலும் என் நாட்டிற்காக நான் கிரிக்கெட் விளையாடியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என சொல்லியுள்ளார்.

இந்தியாவுக்காக 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் யுவராஜ் விளையாடியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com