ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்

ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்

ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்
Published on

முதல் சுற்றில் ஆரம்ப விலையான ஒரு கோடிக்கு விலைபோகாத யுவராஜ் சிங் 2-வது சுற்றில் அதே விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஒரு தொடராக இருப்பது ஐபிஎல் டி20 கிரிக்கெட். உலக வீரர்கள் முதல் உள்ளூர் வீரர்கள் வரை கலக்கும் களமாக அது உள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 12வது ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளைச் சேர்ந்த 1003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் பதிவு செய்த வீரர்களில் 346 பேரை ஏலப் பட்டியலுக்கு ஐபிஎல் நிர்வாகக் குழு தேர்வு செய்தது.

இதில் வீரர்களின் தற்போதைய ஸ்டிரைக் ரேட்டை பொறுத்து, அவர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

யுவராஜ் சிங்கின் ஆரம்ப விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் முதல் சுற்றில் எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து விலைபோகாத வீரர்கள் இரண்டாவது சுற்றில் ஏலம் விடப்பட்டனர். அப்போது மும்பை இந்தியன்ஸ் ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com